வாகனம் ஒட்டுதல் – சோதனை அறிக்கை
தரமான பயிற்சி மையத்தின் பயிற்சிக்கு
பின்பு, நம்மை நாமே, நமது ஓட்டும் திறனை அறிய, சோதனை அறிக்கை உதவுகிறது. இந்த
அறிக்கையில் பத்து முக்கிய பகுதிகளில், கவனிக்கப் படவேண்டிய குறைபாடுகள் 67
மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. ஓட்டுதலில் செய்த பிழைகளுக்கு ஏற்றவாறு புள்ளிகளை
கழித்து, பெறப்பட்ட புள்ளிகள் அடிப்படையில் ஓட்டுனரின் திறமையை நிர்ணயிக்கலாம்.
பிழைகளே செய்யாதவர்கள் - நல்ல சாதனை செய்திருக்கிறார்!கள்
5 பிழைகள் வரை செய்தவர்கள் - நல்ல ஓட்டுனராக வருவதற்குறிய
திறமைகள் பெற்றுள்ளார்.
10 பிழைகள் வரை செய்தவர்கள்
– ஓட்டும் திறன் சராசரியாக உள்ளது.
15 பிழைக்கள் வரை செய்தவர்கள்
– தனியாக ஓட்டுவதற்கு தகுதிபெற்றவர் அல்லர்
பகுதிவாரியாக
கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்கிறது…..
எஞ்சினை இயக்குதல்:
1.
கிளச்சை அழுத்த தவறுதல்
2.
கியரை நியூட்ரலில் வைக்காதிருத்தல்
3.
எஞ்சின் இயங்க தொடங்கியவுடன் பட்டனிலிருந்து கையை
எடுக்க தவறுதல்.
சமதளத்தில் வாகனம் நகர்த்துதல்:
1.
கிளச்சை அழுத்த தவறுதல்
2.
தவறான கியரை தேர்ந்தெடுத்தல்
3.
கைபிரேக்கை சரியான முறையில் தளர்த்த தவறுதல்
4.
பக்ககதுவுகளின் வழியாக எட்டிப்பார்க்க தவறியும், சரியான
கைசைகையை, நகர்த்துவதற்கு
முன்பு காண்பிக்க தவறுதல்.
5.
எஞ்சின் ஓட்டத்தை அதிகப்படுத்துதல்
6.
வாகனத்தை திடீரென நகர்த்தி, திடீரென
குறைத்தல்.
கியர்மாற்ற நுட்பங்கள்:
1.
கியர் மாற்றும்போது சாலையை கவனிக்க தவறுதல்
2.
குறைந்த கியரில் அதிக நேரம் ஓட்டுதல்
3.
உயர்ந்த கியரை உடனே மாற்றுதல்
4.
கிளச், ஆக்சிலேட்டர், கியர் மூன்றையும் இணைத்து மென்மையாக இயக்க தவறுதல்
5.
தேவைபடும்போது கியரை குறைக்க தவறுதல்
6.
வேகம் குறைக்கப்பட்ட எஞ்சின்
7.
வேகம் அதிகப்பட்ட எஞ்சின்
8.
தவறாக கிளச்சை மிதித்தல்
9.
தவறான கியரில் மாற்றுதல்
10.
கியர்கள் மோதுதல்.
சந்திப்புகள்:
1.
மிகவேகமாக செல்லுதல்
2.
தவறான பாதையில் நுழைதல்
3.
நுழையுமுன் போக்குவரத்து நிலையை கவனிக்க தவறுதல்.
வலது இடது திருப்புதல்:
1.
தவறான பாதையிலிருந்து திருப்பத் தொடங்குதல்
2.
திருப்பங்களில் தேவைப்படும் வேகத்தை பராமரிக்க
தவறுதல்
3.
மிகஅகலமாக திருப்புதல்
4.
மிக குறுக்கி வாகனத்தை ஒடித்தல்
5.
தவறான பாதையில் நுழைதல்
6.
ஒருபக்கம் நகர்ந்தபிறகு மறுபக்கம் திருப்புதல்
7.
திரும்பும்போது கியர் மாற்றம் செய்தல்
8.
சக்கரங்களை நேர்படுத்துவதற்கு முன்பு, மிகுந்த
தூரத்திற்கு தயங்குதல்
9.
திரும்புவதற்குமுன் சரியான கியரை தேர்ந்தெடுக்க
தவறுதல்
10.
சரியான வழிகொடுக்க தவறுதல்
11.
சரியான சைகை கொடுக்க தவறுதல்
சுக்கான்:
1.
சுக்கான் கைகளை நிலையற்ற வகையில் பிடித்தல்
2.
சுக்கானை மென்மையாக கையாள தவறுதல்
3.
கைகளை கதவில்/வெளியே வைத்தல்
4.
ஒருகையை மட்டும் உபயோகித்தல்
5.
வாகனம் நிற்கும்போது சுக்கானை திருப்புதல்
6.
சுக்கானை திருப்பும்போது சுக்கானின் குறுக்கு
கம்பிகளை உபயோகித்தல் / சுக்கானின் சக்கரத்திற்குள் கைகளை
உபயோகித்தல்
வேகக்கட்டுப்பாடு:
1.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்குமேல் வேகமாக
செல்லுதல்
2.
வேகவரம்பை மீறி செல்லுதல்
3.
மிக்குறைந்த வேகத்தில் செல்லுதல்
4.
வளைவுகளில் பிரேக் உபயோகித்தல்.
மற்றவாகனம் ஓட்டுபவர்களிடம்
நடந்துகொள்ளும் விதம்:
1.
ஒத்துழைப்பு கொடுக்காதது
2.
ஒத்துழைப்பு இல்லாததால் , வரம்பு கடந்தது
ஓடும் வாகனத்தை கடந்து செல்லுதல்:
1.
முந்தி செல்லும்போது பின்பக்கக்கண்னாடி மூலம் கவனிக்கத் தவறுதல்
2.
முந்துவதற்குமுன் ஹாரன் சத்தம், சரியான சைகை காட்டத்தவறுதல்
3.
முன்பகுதியில் நெருங்கி பிந்தொடர்தல்
4.
மற்ற வாகனங்ககளின் வேகத்தை தவறாக கணித்தல்
5.
வளைவு, குறுக்கு, குன்றுகளில் முந்துதல்
6.
முந்தி சென்றபிறகு, உடனே பாதைக்கு திரும்ப குறுக்கிடுதல்
7.
அபாயமன இட்த்தில் இடப்புறம் முந்துதல்
8.
ஒரே சமயத்தில் பல வாகன்ங்களை கடக்க முயற்ச்சித்தல்
9.
முந்திசெல்லும் வண்டியை தடுக்கும் முயற்ச்சியில் முந்திசெல்லுதல்
10. நிறுத்தப்பட்ட வாகனத்தின் எச்சரிக்கை குறியை கவனிக்கமல் இருத்தல்
11. பார்வை தூரம் மறைக்கும் அளவிற்கு, எதிரே பெரிய வாகனம் நிற்கையில், வேகத்தை குறைக்காமலும், அதிலுள்ள எச்சரிக்கையை கவனிக்காமலும் இருத்தல்
12. கடக்கவேண்டிய கோட்டை அதிக தூரம்விட்டும் கட்த்தல்.
வாகனத்தை நிறுத்துதல்:
1.
முன்னேறி செல்கையில், வேகத்தி குறைத்து, வண்டியை நிறுத்த தவறுதல்
2.
பிரேக் ஒழுங்காக(சீராக) உபயோகிக்க தவறுதல்
3.
கிளச்சை வேகமாக தளர்த்துதல்
4.
கிளச்சை வேண்டிய அளவிற்கு தளர்த்த தவறுதல்
5.
வேகம் குறைக்கப்பட்ட எஞ்சின்
6.
சரியான நிலையில் நிறுத்த தவறுதல்
7.
நிறுத்த தேவையான சைகை காட்ட தவறுதல்
8.
நிறுத்துமுன் பின்னாலுள்ள போக்குவரத்தை கவனிக்க தவறுதல்
9.
வண்டியை மென்மையாக நிறுத்த தவறுதல்
10. முப்பது வினாடி அல்லது அதற்குமேல் வண்டியை நிறுத்தும்போது, நியூட்ரலில் கொண்டுவர தவறுதல்.
-சரவணபவா
No comments:
Post a Comment