Monday, July 15, 2013

B1.Case Studies of Accidents.. விபத்து பற்றிய கணிப்பு

விபத்து பற்றிய கணிப்பு ( case studies of accidents),
விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று, வாகனத்தின் உடைந்த உறுப்புகள் மற்றும் சேதம், காயம் பற்றிய விபரங்களை சேகரித்தல், மற்றும் வாகனத்தின் தன்மைபற்றி, நுட்பமாய் சோதித்தல், கண்டுபிடித்தல் மற்றும் அனுமானித்தல் ஆகியவையின் அடிப்படையில், விபத்து பற்றிய கணிப்பு அமைகிறது.
விபத்து பற்றிய கணிப்பினை புரிந்துகொள்ள, சாலைவிதிகளின் சில பௌதீக சூத்திரங்களை நினைவில் கொள்ளவேண்டும்.
    S = ut
    S = ut + ½ at2
    v2 = u2  + 2as
    v = u + at
s என்பது தூரத்தையும், u என்பது வேகத்தையும், t என்பது நேரத்தையும், a என்பது ஆக்சிலரேசனையும், v என்பது விலாசிடியையும் குறிக்கும்

சில விபத்து கணிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.பாதசாரி வாகன மோதல்

பகல் வெளிச்சத்தில் ஒரு பாதசாரி, நண்பருடன் சாலையை கடக்கும்போது, இட்துபுறமிருந்து வந்த வாகனம் இடித்த்து. இரண்டாவது மனிதர் இடிபடாமல் தப்பிவிட்டார். தப்பித்தவர் தான் சாலையின் எதிர்புற நடைபாதையில் காலை வைக்கும்போது, வாகனம் மோதிய சப்தத்தை கேட்டதாக சாட்சி அளித்துள்ளார்.

விபத்துபற்றிய ஆய்வு:
பாதசாரியின் சராசரி வேகம் = மணிக்கு 5.5 கி.மீ   = வினாடிக்கு 1.54 மீட்டர்
(பாதசாரியை நடக்கவிட்டு, நடந்த தூரம், நேரத்தை வைத்து, துள்ளிதமாக பாதசாரியின் வேகத்தை கணிக்கலாம்)
சாலையின் அகலம் = 7.3 மீட்டர்
சாலையை கடக்க தேவையான நேரம் = 7.3 / 1.54 = 4.7 வினாடி
சாலையை கடக்கும்போது உயிர்பிழைத்த பாதசாரி, வாகனத்தை பார்த்த இடத்திலிருந்து விபத்து நடந்த இடத்தின் தூரம் ( கணக்கிட்டு கண்டுபிடித்தது ) = 100 மீட்டர்
வாகனத்தின் வேகம் u = s / t = 100 / 4.77 = 21.3 மீ / வினாடிக்கு = 77 கி.மீ / மணிக்கு

மற்ற சாட்சியங்கள் இல்லாதபோது, இந்த கணித முறை கணிப்பு, மிக முக்கியமானதாக கருதப்படும். மற்ற சட்சியங்கள் இருந்தாலும் கூட, அதனை உறுதிப்படுத்த, இந்த கணிதமுறை கணிப்பு பயன்படும். இந்த கணிப்பின்படி, பாதசாரி கவனக்குறைவாக சாலையைக் கடக்கவில்லை என்பதும், ஓட்டுனர்தான்
வாகனத்தை செலுத்தியுள்ளார் என்பதும், நிரூபணமாகிறது.

2.சாலை சந்திப்பின் வட்டபகுதியில் (Roundabout) மோட்டார் வாகனம், ஸ்கூட்டர் மோதல்

சாலை சந்திப்பு வட்ட பகுதியில், மோட்டார் வாகனம் ஸ்கூட்டரில் மோதி, ஸ்கூட்டர் ஓட்டியவர் மரணம். தான் சப்த்த்தை மட்டுமே கேட்டதாகவும், மற்றும் பின் சக்கரம் ஸ்கூட்டர் ஓட்டியின்மீது ஏறியபோது, வாகனத்தின் பின்பகுதி அதிற்சிக்குள்ளானதை உணர்ந்ததாகவும் வாகன ஓட்டுனர் கூறுகிறார். மேலும் மணிக்கு 25 கி.மீ வேகத்தில்தான் சென்றதாகவும், மோதிய சத்தம் கேட்டதும், வாகனத்தின் வேகத்தை குறைத்து, நிறுத்தியதாகவும் ஓட்டுனர் கூறுகிறார். பின் சக்கரம் மரணமடைந்தவரின் இட்த்திலிருந்து 15 கி.மீ பயணித்துள்ளது.

நிற்கும் தூரம் = சிந்திக்கும் தூரம் + செயல்படும் தூரம்

பிரேக்கிங் திறன் (Braking efficiency) = 0.2
வாகனத்தின் வேகம் = 25 கி.மீ / மணி = 25000 / 3600 மீ / வினாடி  = 6.9 மீ / வினாடி,

செயல்படும் தூரம் ( Braking distance ) = u2 / 2fa  = 6.9 x 6.9 / 2 x 0.2 x 9.81 மீ  = 12 மீ

சிந்திக்கும் தூரம் = ut = 6.9 x 0.75  =  5.2 மீ

நிற்கும் தூரம்  =  12 + 5.2  =  17.2 மீ

ஓட்டுனர் கூறியபடி 25 கி.மீ வேகத்தில் வந்திருந்தால், வாகனம் நிற்க வேண்டிய தூரம் 17.2 மீ.
விபத்து ஆய்வுசெய்தபோது வாகனத்திற்கும், மரணமடைதவர்க்கும் இடைப்பட்ட தூரம் 15 மீ.
எனவே வாகனம் மணிக்கு 25 கி.மீ. க்கும் குறைவான வேகத்தில்தான் வந்துள்ளது. நமது ஓட்டுனர் பொறுப்பல்ல.

3. காயம் (Injury )

விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் காயங்களின் மூலமாக வாகனத்தின் தன்மையை அறியலாம்.
காயம் பற்றிய விபரம், விபத்து நடந்த இடத்தில் உடனடியாக கிடைக்காவிடிலும், வாகனத்தின் தன்மையை, பின்னர் சம்பந்தப்படுத்த முடியும்.

உதாரணம்:  ஒரு பாதசாரி ஒரு வாகனத்தின் முன்பம்பரால் அடிபட்டார். பாதசாரிக்கு காலில், அடிப்பகுதியிலிருந்து 9” உயரத்தில் அடிபட்டது. வாகனம் சமதளத்தில் இயங்காமல் நிற்கும்போது, அதன் முன்பம்பர், தரை மட்டத்திலிருந்து, 13” உயரத்தில் இருக்கும்.
இக்குறிப்புகளை வைத்து ஓட்டுனர் மோதலுக்கு முன்பாக வாகனத்தின் தடையை உபயோகித்தது தெரிகிறது. எப்படி?

காயத்தின் உயரம், பம்பரின் உயரத்தைவிட குறைந்துள்ளதால், மோதலுக்கு முன்பே ஓட்டுனர், தடையை உபயோகித்தது அனுமானிக்கப் படுகிறது.

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா 


No comments:

Post a Comment