சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு
சாலை, வாகனம்,
சாலை உபயோகிப்போர்… இவற்றில் ஏதேனும் ஒன்றோ,
இரண்டோ அல்லது மூன்றுமே, சாலைவிபத்திற்கு காரணமாயிருக்கலாம்.
அனேக விபத்துக்கள் சாலை உபயோகிப்போர் தவறினால் ஏற்படுவதால், சாலை பாதுகாப்பு பற்றி கவனிப்பது அவசியம்.
சாலையின் நேரான பகுதியில் -
67.2%
வளைவான பகுதியில் - 17.6%
சந்திப்புகளில் - 10.6%
பேருந்து நிலையத்தில் -
2.7%
பேருந்துநிறுத்தம் / பணிமணை
- 1.0%
விபரம் கிடைக்காதது -
0.9%
விபத்துக்கள் நடக்கின்றன
என்பது,
ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சாலை விபத்துக்களை
குறைக்க, நெடுஞ்சாலை பொறியியல் முறை மற்றும் போக்குவரத்து பொறியியல்
முறை பற்றி முக்கியமாக
கவனிக்க வேண்டும்.
போக்குவரத்தினை இடம் மற்றும்
நேரம் அடிப்படையில் பிரித்து அமைப்பது, நேரான சாலை மற்றும் சந்திப்புகளில்,
வாகனம் சங்கமிக்கும் இடங்களை குறைத்தல், சில போக்குவரத்திற்கு
முன்னிரிமை வழங்குதல், பேருந்துநிறுத்தம் அமைக்க வேண்டிய இடம்,
வேக்கட்டுப்பாடு, வேக்கட்டுப்பாடுஇடம்,,
போன்றவைகள்- போக்குவரத்து
பொறியியல் முறையில் அமையும்.
,,
சாலையின் குறுக்குவெட்டு
அமைப்பின் தரத்தை உயர்த்துவதும், சாலையின் பார்வை தரத்தை
(visibility standards) உயர்த்துவதும், நெடுஞ்சாலை
பொறியியல் முறையில் அமையும்.
நமது ஓட்டுனர்களை பொறுத்தவரை, பார்வைத்தரம்
பற்றி அவசியம் தெரிந்திருப்பதன் மூலம், விபத்துகளை கணிசமாக குறைக்கலாம்.
பார்வைத்தரம்
பாதுகாப்பான மற்றும் திறமையான செயல்பாட்டிற்கு, நெடுஞ்சாலையில் முன்பக்க பார்வை மிகமுக்கியம். விபத்துகளை தவிற்க வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு, போதுமான
நேரம், இடம் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் கிடைக்க வேண்டும்.
அதற்கு சாலையில் போதுமான பார்வைதூரம் தேவைப்படுகிறது. நிற்பதற்கான பார்வை தூரம் ( stopping
sight distance )
கடந்துசெல்வதற்கான பார்வை தூரம் (
overtaking sight distance )
முகப்புவிளக்கு பார்வை தூரம் ( Headlight
sight distance )
வளைவானபகுதி பார்வை தூரம் ( Horizndal
Curve sight distance )
சந்திப்புகளில் பார்வை தூரம் ( Intersection
sight distance )
என்று பார்வை தூரம் பலவகைப்படும். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
பாதுகாப்புடன்
நிற்பதற்கான பார்வை தூரம் ( Safe stopping sight distance
)
சாலைத்தடையை
பார்த்தவுடன்,
மூளை காலுக்கு கட்டளையிட்டு, கால் வாகனத்தடையை
மிதிப்பதற்குள் வாகனம் செல்லும் தூரம், சிந்திக்கும் தூரம்
( Log distance ) ஆகும்.
வாகனத்தடை மிதித்து, வாகனம்
நிற்கும்வறை உள்ள தூரம், செயல்படும் தூரம் ( Braking
distance ) ஆகும்.
சிந்திக்கும் தூரம் + செயல்படும்
தூரம் = பாதுகாப்பான நிற்கும் தூரம்.
ஓட்டுனரின் வயது, பால்,
சுறுசுறுப்பு, பார்க்கும் திறன் மற்றும் பார்வைத்தடையற்ற
சுற்றுபுறம், வாகன அமைப்பு, தடையின் அளவு,
வகை முதலியவற்றை பொறுத்து, சிந்திக்கும் தூரம்
மாறுபடும். 0.5 வினாடி முதல் 4 வினாடி வரை
மனிதர்க்கு மனிதர், சிந்திக்கும் நேரம் மாறுபடும். நெடுஞ்சாலை நிர்மாணம் செய்யும்போது, ஓட்டுனர் சிந்திக்கும்
நேரம் 2.5 வினாடி என்று எடுக்கப்பட்டுள்ளது.
dt = 0.278 vt = log distance
வாகனத்தின் வேகம்,, டயரழுத்தம்,
டயர்பட்டன் நிலை, சாலைப்பரப்பின் வகை மற்றும் நிலை,
பருவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில், பிடிமானத்தின்
மதிப்பு ( value of coefficient of friction ) மாறுபடும்.
திட்டமிடுவதற்காக, குறிப்பிட்ட வாகன வேகத்திற்கு,
கீழ்கண்டவாறு, பிடிமான மதிப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மணிக்கு 30 கி.மீ வேகம் வரை 0.40
மணிக்கு 40 கி.மீ வேகம் வரை 0.38
மணிக்கு 50 கி.மீ வேகம் வரை 0.37
மணிக்கு 60-65 கி.மீ வேகம் வரை 0.36
மணிக்கு 80-100 கி.மீ வேகம் வரை 0.35
செயல்படும்
தூரம் = dt = V x V by 254 f
Where V=
speed in KMPH
f= coefficient of longitutional friction
between vehile tures and road pavement
dt= breaking distance in metres
ஓட்டுனர் சிந்திக்கும் நெரம் 2.5 வினாடி என்றும், பிடிமான மதிப்பை மேலேகண்டவாறு
வாகன வேகத்திற்கு தகுந்தபடியும், எடுத்துக்கொண்டு, புறநகர் நெடுஞ்சாலையில், பலவித வேகங்களில், ஒரு வாகனம் நிற்கும் தூரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேகம் சிந்திக்கும்தூரம் செயல்படும்தூரம் நிற்கும்தூரம்
கி.மீ
/ மணி: 0.278
Vt VxV by 254 ( மீட்டர் )
30 21 9 30
40 28 17 45
50 35 27 60
60 42 39 80
80 56 72 120
100 70 112 180
_________________________________________________________________________________________________________________
மீண்டும்
சந்திப்போம் - சரவணபவா
No comments:
Post a Comment