Saturday, July 20, 2013

C4. சாலை விபத்து – என் பார்வை – 4

சாலை விபத்து – என் பார்வை – 4

90 களில் நடந்தது இது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி ஒரு மதிய வேலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தின் ஜன்னலோரம் தலையை சாய்த்தவாறு, கையில் குழந்தையை அணைத்தபடியே தூங்கிகொண்டிருந்தார் ஒரு பெண்பயணி.

ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி தடுகளை வெளியே நீட்டிகொண்டு, லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது

திருப்புவனம் பணிமனை அருகில், இருவாகனமும் பக்கவாட்டில் மோதியதில் – லாரியில் வெளியே நீட்டிகொண்டிருந்த தகடு, பேருந்தின் ஜன்னல்வெளியே சாய்ந்து தூங்கி வந்த பெண்பயணியின் கழுத்தில் வெட்டி மரணம். உயிர் இழந்த தாயின் கழுத்திலிருந்து வடிந்த ரத்தம், தாயின் மடியில் உயிருடன் இருந்த குழந்தையின்மீது வழிந்துகொண்டிருந்த்து.

காலையில் பணிமுடித்த ஓட்டுனர், நட்த்துனர் மதியபணிக்கு வந்தவர்களிடம் பணிமாற்றம் செய்து, வீட்டிற்கு திரும்பும்போது, பணிமனை அருகில் விபத்து நடந்ததால், அவர்களுடன், விபத்துபகுதிக்கு சென்று, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து, காவல்துறைக்கு தகவல் அனுப்பி, ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தபின் … வாகனத்தில் கண்ட காட்சி பதறவைத்தது.

உயிரற்ற தாயின் மடியிலிருந்து, தாயின் ரத்தத்தில் குளித்த உயிருடனிருந்த அந்த குழந்தையை ஒரு நட்த்துனர் பிரித்து, மற்ற நட்த்துனர் மூலம் அருகிலுள்ள பணிமனை ஓய்வறைக்கு எடுத்து சென்று குளிப்பாட்டி,, பராமரிக்க, மற்றொரு நட்த்துனர் உயிரிழந்த தாயின் உடலிலிருந்து நகைகளை கழட்டி தனது காலி டிபன்பாக்சில் போட்டு, ஒப்படைக்க…..

காவல்துறையினறும், பொதுமக்களும் போக்குவரத்து ஊழியர்களின் மனிதாபிமான உதவியை பாராட்ட.
விபத்தில் தனது மணைவி இரந்த தகவல் கிடைத்து, மதுரையிலிருந்து வந்த அந்த நகைகடை உரிமையாளர், முதலில் எங்களிடம் கேட்டது நகைகளை. டிபன்பாக்சில் நகைகளை ஒப்படைத்தோம்.

இரண்டாவதாக அவர் கேட்டது குழந்தையை. … அப்போது அவர் இருந்த மனநிலையில் அவர் மணைவியை பற்றி எங்களிடம் விசாரிக்காதை நினைத்தால், நெருடலாக உள்ளது.

பேருந்து ஜன்னல் சட்டரை மூடிவிட்டு பெண்பயணி தூங்கியிருக்கலாம்

பேருந்து நட்த்துனர் பெண்பயணியை எச்சரித்திருக்கலாம்.

முறையற்ற வகையில். அளவிற்கு அதிகமாக லாரியில் தகடுகள் ஏற்றுவதை தவிர்த்திருக்கலாம்.

லாரியில் ஏற்றபட்ட தகடுகளை தார்பாய் வைத்து மூடி கட்டியிருக்கலாம்’

எத்தனையோ லாமை சொல்லலாம்.

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா என்று வேதனைப் படுவதை தவிர வேறு வழி?

சம்பந்தபட்ட வாகனம் எங்களது நிறுவனத்தை சாராததால், பின்நடவடிக்கை பற்றி தெரியவில்லை.


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா 

No comments:

Post a Comment