Tuesday, July 16, 2013

F. போக்குவரத்து பொறியியல் முறை

போக்குவரத்து பொறியியல் முறை

சேருதல் ( merging )
பிரிதல்  ( diverging )
கடத்தல் ( crossing )

என்ற மூன்று இயக்கங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

T சந்திப்பில்
O   =  சேருதல்   =  3
X    =  பிரிதல்    =  3
.    =  கடத்தல்   =  3
மொத்தம்          =  9

T சந்திப்பிலுள்ள 9  செயல்பாடுகளில், கடந்துசெல்லும் செயல்பாடு 3 மட்டும் அபாயகரமானது. அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாகும். கவனம் தேவை.

நான்கு சாலை சந்திப்பில்
O   =  சேருதல்   =   8
X    =  பிரிதல்    =   8
.    =  கடத்தல்   =  16
மொத்தம்          =  32

நான்கு சாலை சந்திப்பிலுள்ள 32 செயல்பாடுகளில் கடந்துசெல்லும் செயல்பாடு 16 மட்டும் அபயாகரமானது. அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களாகும். கவனம் தேவை.

சாலை சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்படுத்த, கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்:

1.   குறைந்தபட்ச தேவையான பார்வை தூரம் அமைத்தல்
2.   வாகனம் சங்கமிக்கும் இடங்களை குறைக்க, ஓட்டத்தை திசை மாற்றுதல்
3.   சந்திப்புகளில் வாகனம் சங்கமிக்கும் இடங்களை தவிற்க / குறைக்க, ஆக்கிரமிக்கும் நேரத்தை பிரிக்க – போக்குவரத்து சமிக்கைகளை பயன்படுத்தலாம்
4.   T சந்திப்புகளில் – வலது திருப்பத்தை தடைசெய்தல், பக்கசாலைகளை மூடுதல், சேறுமிடங்களை குறைத்தல்.
5.   மேம்பாலம், சுரங்கபாதை, தனியாக சைக்கிள் / பாதசாரி பாதை அமைத்தல்.

மீண்டும் சந்திப்போம் – சரவணபவா


No comments:

Post a Comment