Wednesday, July 17, 2013

C1. சாலைவிபத்து – என் பார்வை – 1

சாலைவிபத்து – என் பார்வை – 1

விபத்து என்றால் என்ன? விபத்தின் காரணம் என்ன? விபத்தை தவிற்க முடியுமா? விதியா? மதியா? – சரியான பதில்?

ஒன்றுக்கு மேல்பட்ட பொருட்கள் அல்லது நபர்கள் , ஒரே நேரத்தில், ஒரே இடத்தை, ஆக்கிரமித்தலின் விளைவே விபத்து ஆகும்!

காலில் முள் குத்திவிட்ட்து என்கிறோம். முள்ளா காலில் குத்தியது? நாம்தான் முள்ளில் மிதித்தோம். முள்  ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த இடத்தை, முள் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த  நேரத்தில், நம் கால் ஆக்கிரமித்ததால்தான், காலில் காயம், வலி ஏற்பட்டது. மனிதமனம் எப்போதுமே தன்தவறை. சுலபத்தில் ஒப்புக்கொள்ளாது. அடுத்தவர் மீது பழிபோடும்.

பென்சில் சீவும்போது, பிளேடு கையை வெட்டிவிட்ட்து.- பிளேடா கையை வெட்டியது? பிளேடு ஏற்கனவே ஆகிரமித்திருந்த பென்சில்பகுதியில், அதேநேரத்தில் நம் கைவிரல் ஆக்கிரமித்ததால்தான், விரலில் காயம்,வலி ஏற்பட்டது.

தென்னை மரத்தடியில் நின்றுகொண்டிருந்த என்தலையில் , தென்னைமட்டை விழுந்து, தலையில் காயம்.- ஏற்கனவே என்னால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை, அதேநேரத்தில், தென்னை மட்டையும், ஆக்கிரமிக்க நினைத்ததின் விளைவே இந்த விபத்து. மட்டை விழுந்த அதே இடத்தை நாம் தவிர்த்திருந்தால், அல்லது மட்டை விழுந்த அதே நேரத்தை நாம் தவிர்த்திருந்தால், இந்த விபத்தை தவிற்திருக்கலாம்.

சாலையின் T சந்திப்பில்- சேருதல், பிரிதல், கடத்தல் ஆகிய மூன்று செயல்பாடுகளில், கடந்துசெல்லும் செயல்பாடு 3 மட்டும் அபாயகரமானது.

நான்குசாலை சந்திப்பில்- சேருதல், பிரிதல், கடத்தல் ஆகிய மூன்று செயல்பாடுகளில், கடந்துசெல்லும் செயல்பாடு 16 மட்டும் அபாயகரமானது. இவைகள் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களாகும். இத்தகய வாகனம் சங்கமிக்கும் இடங்களை (conflicting point) , ஒரேநேரத்தில், ஒன்றுக்கு மேல்பட்ட வாகனங்கள் கடந்துசெல்ல முயலும்போதுதான், விபத்து ஏற்படுகிறது.

முன்னுரிமையுள்ள வாகனத்திற்கு வழிகொடுத்து, அதன்பிறகு. அந்த இடத்தை, கடந்து சென்றால், சாலை விபத்து ஏற்படாது. சாலை சந்திப்புகளில் சமிக்கை விளக்குகளை அமைத்து, வாகனம் சங்கமிக்கும்  இடத்தை, ஒருநேரத்தில், ஒருவாகனத்திற்கு மட்டும் கடந்துசெல்ல அனுமதிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். சாலை விதிகளை மதிப்போம். விபத்துக்களை தவிற்போம்.

கிராமப்புற சாலையோரம் சென்றுகொண்டிருந்த பாதசாரி, தனக்கு முன்னால் கடந்து சென்ற பாம்பு ஒன்றினை கண்டு பயந்து நிற்க, பாம்பு செல்ல,-- எங்கிருந்தோ திடீரென வந்த கழுகு ஒன்று, அந்த பாம்பை கவ்வி, உயரே பறந்தது பார்த்து, வியந்து, நடையை தொடர்ந்தான் அந்த பாதசாரி. சாலையில் பாம்பு ஆக்கிரமித்த இடத்தை, அதே நேரத்தில் தவிர்த்த, பாதசாரி, நீண்ட தூரம் சென்றபிறகு, உயரே பாம்புடன் பறந்துகொண்டிருந்த கழுகிடமிருந்து போராடி, விடுபட்டு, கீழே பாதசாரியின் தலையில் விழுந்து, கொத்தி, பாதசாரி பாம்பு கடித்து மரணம்.

சாலையோரம் நடக்கும் போது, தனது மதியால், பாம்பு கடியிலிருந்து தப்பியவன், சிறிது நேரம் கழித்து, வேறுஇடத்தில், அதே பாம்பினால் தலையில் கொத்தப்பட்டு, மரணமடைந்தது--?
விதியா? விதியை மதியால் வெல்ல முடியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்!


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா

No comments:

Post a Comment