Sunday, July 7, 2013

A3. ஓட்டுனர் பயிற்சி - கேள்வியும் பதிலும்

ஓட்டுனர் பயிற்சி – கேள்வியும் பதிலும் – 3
21. கிளச்பெடல் மயிரிழை வித்யாசத்தில் ரிவர்ஸ்கியராகவும், பிரேக்காகவும், ஆக்சிலேட்டராகவும் மாறி மாறி வேலை செய்கிறது – விளக்கம்?
எஞ்சினை இயக்கிவிட்டு, கிளச்பெடலை முழுவதும் அழுத்தி, கியரில் இட்டு, பெடலை மிகமெதுவாக மேலே வரவிடுங்கள். D என்ற இடம் வரும்போது கிளச்பபிளேட், பிளைவீலுடன் ஒட்ட ஆரம்பிக்கிறது. இது கடிக்கும் இடம் (Biting Point). இப்போது வண்டி அசையவில்லை. ஆனால் எஞ்சின் ஒலி மாறுவதை கவனியுங்கள். இங்கிருந்து சுமார் 1/2” தூரத்திற்குள் B என்ற இடம்வரை கிளச் வேலை முடிந்துவிடுகிறது. பிறகு A வரை இருப்பது கிளச்பிளே ஏரியா. D யிலிருந்து B வரும் வழியில் வண்டி அசைய ஆரம்பிக்கிறது. இந்த இடம் C. இதற்கு கிளச் பேலன்ஸ் பாயின்ட் என்று பெயர்.
வண்டியை ஒரு மேட்டில் நிறுத்தி C இடம்வரை வந்துவிடுங்கள். இட்த்தை சரியாக பிடித்துவிட்டால், பிரேக் இல்லாமலே வண்டி முன்பின் செல்லாமலும், எஞ்சின் சிரமமின்றி ஓடிகொண்டும் நிற்கும். இது வண்டியின் எஞ்சின்பிரேக். பிரேக்கண்ட்ரோல் கிளச்பெடலில் இருக்கிறது. பெடல் நூலளவு உள்ளே போனால், வண்டி பள்ளத்தில் பின்செல்லும். பெடல் நூலளவு வெளியே வந்தால் வண்டி முன்னேறும்.
22. ஓடும் வாகனத்தின் பின் அச்சு ரிடக்சன் விகிதம் (Rear axle reduction ratio) 6:1 – விளக்கம்?
பின் சக்கரம் ஒருமுறை சுற்ற புரப்பல்லர்சாப்ட் 6 முறை சுற்றவேண்டும்.
23. வண்டி 5 வது கியரில் இருக்கும்போது, கியர்விகிதம் 1:1 – விளக்கம்?
எஞ்சின் ஒருமுறை சுற்றினால், சாப்ட் ஒருமுறை சுட்றும்.
24. கியர்பாக்ஸ் செய்யும் வேலை என்ன?
முதல் கியரில் எஞ்சின் சக்தி நிறையவும், வண்டியின் வேகம் மிகவும் குறைந்தும் இருக்கிறது. கியர்கள் 2,3,4,5 என்று ஏற ஏற, சக்தி குறைந்து, வண்டியின் வேகம் அதிகரிக்கிறது. இதுதான் கியர்பாக்ஸ் செய்யும் வேலை.
25. கால்பிரேக் பற்றி ஓட்டுனர் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
கால்பிரேக் உபயோகிக்கும்போது பிரேக்கட்டைகள், பிரேக்சக்கரத்தில் உரசுவதால் உஷ்ணம் உண்டாகிறது. சக்கரம் ஓரளவு சூடேறியவுடன் விரிந்து பிரேக்கட்டைகளை பிரிந்து விலகிவிடுகிறது.  வேகமாக செல்லும் வண்டியில் முன்சக்கரங்கள் நேராக இருக்கும்போது தவிர மற்ற சமயங்களில் ( திருபங்கள், வளைவுகள் ) கால்பிரேக் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. வழவழப்பாக, சறுக்கலாக இருக்கும் இடங்களில் கால்பிரேக்கை தொடவும் கூடாது. பையன் எதை கண்டு பயந்தாலும் அம்மாவைக் கட்டிப் பிடிப்பதுபோல், கால்பிரேக்கை உபயோகிக்க்க் கூடாது.
26. கால்பிரேக் பெடலை உபயோகிக்கும் டெக்னிக் யாது?
வலதுகாலை பெடல்மீது வைத்து ஒன்றரை பிளே வாங்கி, B வரை வந்து, தேவைபட்டால் E அளவில் ¼, ½, ¾ பிரேக் போடவும். வண்டி வேகம் குறையக் குறைய, பிரேக்கை சிறிது சிறிதாக தளர்த்தி, வண்டி நிற்கும்போது B இடத்தில் வரவும். கடைசி 1 அங்குலமாவது தானாக உருண்டு நிற்கவேண்டும்.
27. முழு பிரேக்கையும் ஏன் போடக்கூடாது?
முழு பிரேக்கிற்கும் தேவை ஏற்படுவதேயில்லை. பழக்கம் ஆபத்திலும் முடியலாம். கால்பிரேக் வண்டியை நிறுத்துவது இல்லை. சக்கரங்களைத்தான் சுற்றவிடாமல் பிடிக்கிறது. சாலை-டயர் உறசலால் வண்டி நிற்கிறது. முழுபிரேக் போடும்போது, சக்கரங்கள் அணுவளவும் சுற்றமுடியாமல் போய்விடுகிறது. ( Wheel lock ). வேகமாக செல்லும்போது, சாலை சறுக்கலாக இல்லாவிட்டால்கூட ஆபத்து ஏற்படலாம்.
28. வாகனம் ஓட்டுதலில் குலுக்கலும், அதிற்சியும் எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக எல்லா ஓட்டுனர்களும், இரண்டாவது கியர் இட்டபிறகு, காஸ்கொடுத்து, கிளச்சை மெதுவாக விட்டு, வண்டியை நயமாக நகர்துகிறார்கள். நகர்த்தியபின், பலர் இந்த கியர்-காஸ்-கிளச் வரிசைக் கிரமத்தை மறந்துவிடுகிறார்கள். கியர் மேல்மாற்றம் செய்யும்போது, வரிசைக் கிரமம் கியர்-கிளச்-காஸ் என்று மாறிவிடுகிறது. இது தவறு. இதனால்தான் குழுக்கலும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. காஸ்பெடல் எஞ்சின் வேகத்தை மட்டும் சரிவரக் கட்டுப்படுத்தும். வண்டியின் வேகத்தை கிளச்பெடல்தான் சமாளிக்க வேண்டும்.
29. நெடும் சாலை ஒன்றில், பாரவண்டி ஒன்று, வேகமாகச் சென்று ஒரு வலது திருப்பத்தை நெருங்குகிறது. ஓட்டுனர் வேகத்தை குறைத்து, திருப்பத்தின் ஆரம்பத்தின் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டார். இப்போது 3 இயற்கை சக்திகள் வண்டியின் போக்கை பாதிக்கும். அவை என்ன?
திசைத் திருப்பத்தால் ஏற்பட்ட வலதுபுறம் இழுக்கும் மார்க்கசக்தி ( Directional Force )
நேராக உருண்டு வந்த வேகத்தினால் ஏற்பட்ட உந்துசக்தி ( Momuntum Force )
வட்டமாக சுற்றும் பொருளை வெளிப்புறமாக தள்ளும் பக்கவாட்டுசக்தி ( Centrifigal Force )
30. திருப்பங்களில் வண்டியின் ஆபத்தில்லா போக்கை நிர்ணயிப்பது எவை?
டயர்கிரிப்பும், ஸ்டியரிங்கும் ஆகும்


மீண்டும் சந்திப்போம்- சரவணபவா 

No comments:

Post a Comment