Sunday, July 7, 2013

A4. ஓட்டுனர் பயிற்சி - கேள்வியும் பதிலும்

ஓட்டுனர் பயிற்சி – கேள்வியும் பதிலும் – 4
31. திருப்பங்களில் வண்டி அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்?
ஸ்டியரிங்கை வலது அல்லது இட்துபுறம் திருப்பியதால் ஏற்பட்ட மார்க்கசக்தியின் ( Directional Force ) பலம், டயர்கிரிப்பை பொறுத்து இருக்கிறது. டயர்கிரிப் சக்த்தியைவிட நேராக இழுக்கும் சக்தியும், பக்கவாட்டில் இழுக்கும் சக்தியும் அதிகரித்துவிட்டால் ஆபத்தில் முடியும். முதலாவதாக வேகம் டயர்கிரிப்பை பாதிக்கிறது. வளைவுகளில் வண்டி வேகமாக செல்லும்போது, வளைவில் உள்பக்கமாக உள்ள முன்பின் சக்கரங்கள், பக்கவாட்டு சக்தியால் சாலைவிட்டு உயர எழும்புகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு உயரும்போது, வண்டியின் பாரம், இருபுறமும் சமமாகி, வண்டி எந்தப்பக்கம் சாயும் என்று கூறமுடியாத நிலையை அடையும். இந்த குறிப்பிட்ட நிலையில் போக்குவரத்து சூல்நிலை காரணமாக, ஒவர்ஸ்டியர் செய்ய நேரிட்டலோ, அல்லது கிளச்பெடலை அல்லது பிரேக்பெடலை உபயோகித்தாலோ, அந்த வண்டி என்ன ஆகும் என்று சொல்வது மிக்க்கடினம்.
32. வண்டியின் பாதுக்காப்புக்கு தேவையான ஸ்டியரிங்கை பாதிக்ககூடியவை எவை?
வண்டியின் முன்சக்கரங்கள் இரண்டும் ஒரே நேர்வரிசையில் (Wheel alignment) இருக்கவேண்டும். சக்கரங்கள் முன்பக்கம் குவிந்து (Toe in) இருக்கவேண்டும். ஜீப் போன்ற முன்அச்சில் விசையுள்ள வண்டிகளில், முன்சக்கரங்கள் முன்பக்கம் அகன்று (Toe out) இருக்க வேண்டும். பிறகு கிங்க்பின் காஸ்டர் கோணம் (Castor angle) முன்சக்கரங்கள் மேல்புறம் அகண்டு இருப்பது (Wheel camber).. ஸ்டியரிங் உறுப்புகளில் எவ்வித கோளாறுகள் இருந்தாலும், வண்டி பாதுகாப்பாக திரும்புவதை பாதிக்கும்.
33. டயர் கிரிப்பை பாதிப்பவை எவை?
வழவழப்பான டயர், வழுக்கான சாலை வண்டியில் அளவுக்கு மிஞ்சிய பாரம் மற்றும்
தவறாக ஏற்றபட்ட பாரம்: முன்புறம் காலி, பின்புறம் அதிக பாரம்
                         இடது அல்லது வலதுபுறம் அதிகபாரம்.
                         காலிவண்டி,, கூரையில் அதிக பாரம்
                         டயர்களில் காற்று அளவு அதிகம் அல்லது குறைவு.
34. திருப்பங்களிலும், வலைவுகளிலும் வண்டி நல்ல வேகத்திலும் செல்லவேண்டும், அணுவளவு ஆபத்தும் இருக்கக்கூடாது. அது எப்படி?
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு ஓட்டுனர், திருப்பத்தை கண்டு, வேகத்தை குறைத்து, மணிக்கு 50 கி.மீ வேகத்தில், திருப்பத்தில் நுழைகிறார். நுழைந்தவுடன் பக்கவாட்டு சக்தி, உந்துசக்திகளால் தாக்கபட்டு, வேகத்தை மணிக்கு 30 கி.மீ வரை குறைக்கிறார். வெளியேறும் வரையில் வண்டியின் வேகம் மேலும் மணிக்கு 20 கி.மீ ஆகக் குறைகிறது. இப்படி இறங்கு வேகத்தில் செல்லும்போதும் எதிர்பாராத போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டால், ஓட்டுனரை தினர வைக்கிறது. அவருக்கு சாதகமான டயர்கிரிப் சக்தியைவிட எதிர்ப்பு சக்திகள் அதிகமாக தோன்றுகின்றன. பிரேக், கிளச்சை தொடுவதால் ஆபத்து கூடுகிறது.
இரண்டாவது ஓட்டுனர் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வந்தவர், தூரத்தில் திருப்பத்தை கவனித்து, சரியாக கணக்கிட்டு ஆக்சிலரேட்டரை அழுத்தி, ஏறுவேகத்தில் திருப்பத்தை கடக்கிறார். வெகுவிரைவில் மீண்டும் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வந்துவிடுகிறார். நுழையும் இடத்தில் வேகத்தை கணிசமாக குறைத்துவிட்டதால், பக்கவாட்டுசக்தி, உந்துசக்திகளை கணிசமாக குறைத்து, அதேசமயத்தில், தனக்கு சாதகமான டயர்கிரிப் சக்தியை அதேவிகிதத்தில் அதிகப்படுத்திக் கொண்டார். வண்டியின் எல்லா சக்கரங்களும் சாலையில் அமர்ந்து உருளுகின்றன. திருப்பங்களில் மெதுவாக நுழைந்து, வேகமாக வெளியேற வேண்டும்.
35. வேகக்கட்டுப்பாடு – நகர்புற சாலைகளுக்கும், புறநகர் சாலைகளுக்கும் வேறுபடுவது ஏன்?
நகர்புற சாலைகளில் தெருக்கள் வெறிச்சோடி கிடந்தாலும், மிக்குறைந்த வேகத்தில்தான் திருப்பங்களை கடக்கமுடியும். சாலைகளின் அமைப்பும், திருபங்களின் இருப்பிடமும்தான் காரணம்.
புறநகர் சாலையில் (நெடுஞ்சாலை), ஓரேசாலை வளைந்து வளைந்து செல்வதால், திருப்பங்கள் ஏற்படுகின்றன. எதிரும் புதிருமாக இரண்டேவகை போக்குவரத்துதான் உண்டு. இரண்டுக்கும் வசதியாக
திருப்பத்தில், வெளிப்புறம் மேடாக அமைக்க வசதிஉண்டு. மாறாக நகர்புறத்தில், அநேகமாக எல்லா திருப்பங்களும், சாலை சந்திப்புகளில் அமைகிறது. ஒரு சந்திப்பில் ஒவ்வொரு சாலையிலிருந்தும், நேராக, வலதுபுறம், இடதுபுறம் செல்லும் மற்றவகை போக்குவரத்துக்கள் சந்திக்கின்றன. நாற்சந்தியில் 12 வகை போக்குவரத்துகளை காணலாம். இதில் யாருக்கும் சாலையை ஒருபுறம் மேடாக கட்டி (Banking) உதவமுடியாது. மேலும் போக்குவரத்து நெரிசல், மேல்பாலங்களில் இருந்து இறங்கியவுடன் திருப்பம், இவைகள் நகர்புறங்களில் அதிகம். எனவே நகர்புறங்களில் மணிக்கு 35 கி.மீ க்கு மேலும், புறநகர்சாலைகளில் மணிக்கு 60 கி.மீ க்கு மேலும் செல்லக்கூடாது.
36. திருப்பங்களுக்கும், கியர்மாற்றங்களுக்கும் தொடர்பு உண்டா?
நேரடி தொடர்பு இல்லை. எஞ்சின் வேகம், முடுக்குசக்தி, வண்டியின் வேகம், வண்டியின் பாரம் ஆகியவைகள்தான் கியர்மாற்றங்களை நிர்ணயிக்கின்றன. திருப்பங்கள் அல்ல. திருப்பங்கள் வண்டியின் வேகத்தை நிர்ணயிப்பதால் மறைமுக தொடர்பு ஏற்படுகிறது. திருப்பங்கள் ஒவ்வொன்றிலும் கியர்மாற்றம் செய்யவேண்டியதில்லை. அனாவசிய கியர்மாற்றம் எரிபொருள் செலவை அதிகரிக்கும். ஆயினும் கீழ்கியர்மாற்றம் திருப்பங்களில் வேககட்டுப்பாட்டையும் (Speed control), வேகமாக வெளியேறு என்ற விதிக்கு ஏற்ப, துரிதமான வேக வளர்ச்சியை (Accelaration) தருவதால், பலன்தரும் வகையில் உபயொகிக்கவேண்டும்..
37. கண்களை பாதுகாப்பது எப்படி?
அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்களை கழுவ்வேண்டும். காரட் கிழங்கை பச்சையாக சாப்பிடவேண்டும். அடிக்கடி டாக்டரிடம் கண்களை சோதிக்கவேண்டும்.
38. ஓட்டுனரின் பார்வை எவ்வாறு இருக்கவேண்டும்?
வண்டிக்குமுன், குறிபிட்ட ஒரேதூரத்தில், ஒரேநிலையில் பார்வை தேங்கக்கூடாது. பார்வைக்கு முன்னால் எட்டியும், குறுகி அருகிலும், இடமாகவும், வலமாகவும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அடிகடி பின்கண்னாடியை பார்க்கவேண்டும். முன்செல்லும் வண்டியின் மேலும் பார்வை தேங்கக்கூடாது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சமயங்களில், டயல்களை ஒருமுறை நோட்டமிட வேண்டும். பிரகாசமான விளக்குகளை நேர்கண்னால் பார்க்கக்கூடாது. ஓரக்கண்னால் மட்டும் பார்க்கவேண்டும். சாலையில் தோன்றும் பலவித கவர்ச்சி பொருள்கள் மீதும் பார்வை தேங்கிவிடக்கூடாது.
39. கண் பார்வையின் விசேசகுணங்கள் என்ன?
யாருமில்லாத சாலையில் வேகமாக போய்கொண்டிருக்கிறீர்கள். ஏதாவது திடீர் அசைவு ஏற்பட்டால்- சாலையோரம் மாடு முதலியவை. அது பார்வையை ஈர்த்துக்கொள்ளும். அதேபோல் தோற்றத்தில் மாறுபட்ட பொருள்களும் பார்வையை கவர்ந்துகொள்ளும். நீண்ட நேரத்திற்கு சாலையும் மரங்களுமே பார்வையில் இருந்தது பிறகு பார்வை தானாக ஒருபுறம் இழுக்கப்படுகிறது. அங்கு ஒரு விளம்பர பலகை தெரிகிறது. கண்களுக்கு மேலும் ஒருகுணம் உண்டு. எந்த பொருளையும், முதலில் மத்தியில்தான் பார்க்கும். ஒரு மிருகத்தின் படத்தை நண்பரிடம் ஒருகணம் காட்டிவிட்டு மறைத்துவிடுங்கள். மிருகத்திற்கு காது, வால், கொம்பு இருக்கிறதா என்று கேளுங்கள். முழிப்பார். வயிறு ஒன்றைத்தான் பார்த்தார். ஓட்டுனர் பார்வையில் வயிறு முக்கியமில்லை. முன்செல்லும் அல்லது வரும் வண்டியின் நீளம், அகலம், உயரம் முதலியவை முக்கியம். சுற்றி இருப்பதை பார்வை வளைந்து செல்லாது.
40. இரவு நேரங்களில் பாதுகாப்புடன் வாகனம் ஓட்டுவதற்கு, ஓட்டுனர் கவனிக்க வேண்டிய விசயங்கள்?
இரவுப்பார்வை, பகல்பார்வையில் ஒரு பங்குதான் இருக்கிறது. அந்த அளவில் வேகம் தனிக்கப்பட்டு, கவனம் அதிகரிக்கப்பட வேண்டும். எதிரில் வரும் வண்டிகளின் பிரகாசமான விளக்குகள் ஆபத்தானவை. அந்த விளக்குகளுக்கு பின்னால் இருப்பது எதுவுமே தெரியாது. விளக்குகளுக்கு முன்னால் நமது இட்துபுறமாக உள்ள மட்டுவண்டி, சைக்கிள் முதலியவையும் தெரியாது. இவை திடீரென்று நம்வண்டிக்கு முன்னால் தோன்றும். நம்வண்டிக்கு சில மீட்டர் முன்னால், கண் தெரியாமல் போய்விடும் (Blind). எதிர்வரும் வண்டி ஓட்டுனருக்கும் இந்த சிக்கல் உண்டு. விளக்குகளை மாற் மாறி அணைப்பதால் இருவரும் ஆபத்து உண்டா என்று தெரிந்துகொள்ளலாம். நம்விளக்குகளை மட்டும் அனைத்தாலும் சிறிது பயனுண்டு. இல்லையேல், அடிப்படை சட்டம் கூறுவதுபோல் “கண்பார்வைக்கு உட்பட்டு நிறுத்தக்கூடிய வேகதிற்குள்” செல்லவேண்டும்.

மீண்டும் சந்திப்போம் –சரவணபவா
.

No comments:

Post a Comment