Tuesday, July 9, 2013

A7. ஓட்டுனர் பயிற்சி - கேள்வியும் பதிலும்

ஓட்டுனர் பயிற்சி – கேள்வியும் பதிலும் – 7
61. முன்சக்கர டயர் வெடிப்பதின் காரணம் ஒன்றை விளக்குக?
புது டயர் ஒன்றில் காறு குறைவு. ஓட்டுனர் கவனுக்கவில்லை. குண்டு குழிகளை பார்த்து ஓட்டவில்லை. டயருக்கு ஒரு பலத்த அடி விழுகிறது. டயரின் உட்புறமுள்ள ரேயான் விரிப்புகள் 12 ல் (12Ply) 10, சுமார் 4 அங்குள நீளத்திற்கு கிழிந்துவிடுகிறது. அதே நிலையில், அதேடயர், அதே இடத்தில், சிறிது பலம்குறைந்த அடி மறுபடியும் வாங்க நேரிட்டால், கிழிந்த இடம் விரியும். காற்று அழுத்தத்தினால் டியுபும் அதனுள் நுழையும். விரிந்த இடம் மூலம் டியுபும் 1” சீவப்படும். ஓட்டுனருக்கு படால் என்ற சத்தம் மட்டும் கேட்க்கும்.
62. முன்சக்கர டயர் வெடித்தால், ஓட்டுனர் என்ன செய்யவேண்டும்?
உடனே வண்டி, டயர் வெடித்த பக்கம் இழுக்கும். ஸ்டியரிங்கை கெட்டியாக பிடிக்க வேண்டும். ஆக்சிலரேடரை விட்டு காலை எடுக்க வேண்டும். பிரேக்பெடல் அருகில்கூட வலதுகால் செல்லக்கூடாது. கால்பிரேக் போடுவது தற்கொலை முயற்சிக்கு சமம். கைபிரேக் உபயோகிக்கலாம். அது பின்சக்கரங்களை மட்டும் கட்டுப் படுத்துவதால்.
கீழ்கியர் மாற்றம் செய்து, எஞ்சின் பிரேக்கை உபயோகிக்கலாம். வேகம் 20 kph வரை குறைந்தபின் கால்பிரேக்கை ¼ அல்லது ½ அளவு குத்தி, காலை எடுத்துவிட வேண்டும். அதே சமயம் ஸ்டியரிங்கை உடும்பு பிடியாக பிடிக்க வேண்டும்.
63. சறுக்குதல் (Skidding)  எத்தனை வகைப்படும்? அவற்றின் காரணம் என்ன?
வண்டி மூன்று வகையாக சறுக்கலாம். முன்சக்கரங்கள் மட்டும். பின்சக்கரங்கள் மட்டும். நான்கு சக்கரங்களும்.
தவறான செய்கைகள் : வேகத்தை திடீரென்று கூட்டுவது, குறைப்பது,
                       ஸ்டியரிங்கை வெடுக்கென்று திருப்புவது,
                       பிரேக், கிளச் உபயோகிப்பது.
64. ஸ்டியரிங்க் இணைப்பு துண்டிக்கப்பட்டால் ஓட்டுனர் செய்யவேண்டியது என்ன?
ஸ்டியரிங்கை அசையாமல் பிடிப்பது. ஆக்சிலரேட்டர்பெடலை விட்டு காலை எடுப்பது. எஞ்சின்பிரேக்கை உபயோகிப்பது. கைபிரேக்கை முழு பிரயோகம் செய்தல். எங்கேயாவது மோதுவதற்கு முன்னால் கால் பிரேக்கை கடைசியாக உபயோகிப்பது.
65. கிளச்பிளேட்டின் திறன் துரிதமாக குறைகிறது (Clutch slipping) என்ன செய்வீர்கள்?
கிளச்திறன் குறைவதால், எஞ்சின் பிரேக் பிடிக்க வழியில்லாமல் போகிறது. இதி சரிவுகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் அதிக ஆபத்தை விளைவிக்கும். கால்பிரேக்கை மட்டும் நம்பி வெகுதூரம் மலைசரிவுகளில் செல்ல முடியாது. கால்பிரேக் திறனும் குறையும் முன்பே வண்டியை
நிறுத்திவிடவும். அடிக்கடி வண்டியை நிறுத்தி ½ கி.மீ தூரம் தண்னீர், டீ உதவி கிடைக்கும் இடம் வரை செல்ல்லாம்.
66. ஆக்சிலரேட்டர்பெடல் சிக்கிக்கொண்டு எஞ்சின் அலறுகிறது. என்ன செய்வீர்கள்?
கிளச் பெடலை தொடாமல், பிரேக் மிதித்து வண்டியை நிறுத்த வேண்டும்.
67. ஹாரன் சிக்கிக்கொண்டு அலறினால் என்ன செய்வது?
மின்சாரமாயிருந்த்தால் கம்பிகளை கைய்யால் பிய்த்து எடுத்துவிடுங்கள். பட்டரி டெர்மினலை கழட்டுவது சுழபமல்ல. கற்று அழுத்தத்தில் வேலை செய்யும் ஹாரனாக இருந்தால், பிரேக்பெடலை பல தடவை மிதிக்கவும். மீண்டும் வண்டி புறப்படுமுன், காற்று அழுத்தை கவனிக்கவேண்டும்.
68. டயர் பஞ்சர் என்ன செய்யவேண்டும்?
ஸ்டியரிங்க் ஒருபக்கம் இழுக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துகொள்ளவேண்டும். வண்டியை உடனே நிறுத்தவும்.
69. மின்சார தீ. என்ன செய்யவேண்டும்?
தண்னீர் உபயோகிக்காமல் அணைக்க வேண்டும். பட்டரி டெர்மினல்களை கழட்டி விட்டால் தீயின் மூலகாரணங்களை அணைத்திடலாம்.
70. வண்டி கட்டுபாட்டைமீறி மலைசரிவில் உருண்டுவிட்டால் என்ன செய்வது?
அச்சத்திற்கு இடம்தரக் கூடாது. சரிவில் உள்ள சிறிய பாறைகள், புதர்கள், மரங்கள் ஆகியன வண்டியை நிறித்தி, திருப்பி, மெதுவாக உருட்டி, செல்லும் திசையை விதம் விதமாக மாற்றி விளையாடுகின்றன. பல நிலைகளில் வண்டி சிலவினாடிகள் ஒரே நிலையில் நின்றபின் உருள ஆரம்பிக்கிறது. பயத்தினால் வண்டியை விட்டு உடனே விலக முயற்சிக்கக் கூடாது. சரியான சந்தர்ப்பம் வரும்போது வண்டியை விட்டு விலக வேண்டும்.
71. மூன்று நிலைத் திருப்பம் (Three point turn) விளக்குக?
சந்துகள் இல்லாத இட்த்தில் வண்டியை திருப்ப பயன்படுகிறது. வண்டி முன்னால் வலதுபுறம் சென்று நிற்குமுன் ஸ்டியரிங்கை இட்துபுறம் திருப்பி, பின்னால் செல்ல வசதியாக வைக்கவேண்டும். அவ்வாறே பின்னால் சென்று நிற்குமுன், மறுபடியும் வலதுபுறம் திருப்புவது
72. நகர்புற சாலைகளில் வண்டியை திருப்ப என்ன செய்யவேண்டும்?
சாலை எவ்வளவு அகலாமக இருந்தாலும், ஒரே சுற்றாக சுற்றி வண்டியை திருப்பக்கூடாது. மூன்றுநிலை திருப்பமும் கூடாது. இட்துபுறம் ஒரு சந்தை தேடி, அதைதாண்டி நிறுத்துங்கள். சந்துக்குள் ரிவர்ஸ் கியரில் மெதுவாக சென்று நிறுத்துங்கள். மெயின்ரோடுக்குள் முன்னோக்கி சென்று வலதுபுறம் திருப்புங்கள். சந்துக்குள் முதலில் நுழைந்து மெயின்ரோட்டிற்கு ரிவர்சில் வரக்கூடாது.
73. கிராமபுற சாலைகளில் வண்டியை திருப்ப என்ன செய்யவேண்டும்?
வலதுபுறம் ஒரு சந்தை தேடி, அதை தாண்டி நிறுத்துங்கள். சந்துக்குள் ரிவர்சில் சென்று நிறுத்துங்கள். முன்னேறி இட்துபுறம் திருப்புங்கள்.. சாலைக்குல், சந்திலிருந்து எப்போதும் ரிவர்சில் வரக்கூடாது. போக்குவரது இல்லாத இட்த்தில், வலது சந்தில் ரிவர்ஸ் செய்வது சுலபம்.
74. இரவில் வாகனம் ஓட்டும்போது என்ன செஎய்யவேண்டும்?
அவசியமான விளக்குகள் நல்லநிலையில் இயங்குகிறதா என்று சரிபார்க்க வேண்டும். கண்கூசல் இல்லாமல் ஒளிகொடுப்பதற்கு முகப்பு விளக்கு இயன்குகிறதா என்று சரிபார்க்க வேண்டும். இருள்கவிழ்ந்த காலை வேலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும்,, தெருவிளக்கு தேவையான வெளிச்சத்தை கொடுக்காதபோது, முன்விளக்கை உபயோகிக்கவும். எதிர்வரும் வாகனத்தை நெருங்கும்போதும், பிறவாகணங்கள் நெருங்கி பின்தொடரும்போதும், டிப் செய்து, முகப்பு விளக்கின் ஒளியை குறைக்கவும்.
75. நீங்கள் எப்போது பிறவாகனங்களை முந்தி செல்லக் கூடாது?
பிறவாகனம் நம்மை கடக்கும்போது.
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா


No comments:

Post a Comment