Saturday, July 6, 2013

A2. ஓட்டுனர் பயிற்சி - கேள்வியும் பதிலும்

ஓட்டுனர் பயிற்சி – கேள்வியும் பதிலும் – 2
11. விளக்கு சிக்னல்கள் எத்தனை வர்ணங்களில் எரிகின்றன?
   சிகப்பு, சிகப்பு-மஞ்சள், பச்சை, மஞ்சள்
12. உங்களுக்கு சிகப்பு-மஞ்சள் வரும்போது, பச்சை வந்துவிடும், இப்போதே புறப்படலாம் என்ற ஆவல்     ஏற்பட்டால் ஆபத்து..ஏன்?
    சிகப்பு               -  பச்சை
    சிகப்பு-மஞ்சள்        -  மஞ்சள்
    பச்சை               -  சிகப்பு
    மஞ்சள்              -  சிகப்பு-மஞ்சள்
நீங்கள் சிகப்பு விளக்கில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். உங்கள் வலது புறமிருந்து வரும் வண்டிகளுக்கு இப்போது பச்சை விளக்கு எரியும். வலது புறமிருந்து வரும் வண்டிகளுக்கு பச்சை மாறி மஞ்சள் எரியும். அங்கு ஓடிவந்துகொண்டிருக்கும் வண்டி, மஞ்சள் கடந்து சிகப்பு வந்துவிடும் என்று வேகத்தை மேலும் கூட்டிவிடலாம். இரண்டு வண்டிகளும் ஏறுவேகத்தில் நெருங்கி, மோதலை தவிர்க்கமுடியாமல் போய்விடக்கூடும். விளக்கு பச்சையாக மாறியபின்புகூட அவசரக்காரர் யாராவது சந்திப்பில் வருகிறாரா என்று கவனிப்பது நல்லது.
13. தற்காப்பாக வண்டி ஓட்டுதல் (Defensive Driving) என்றால் என்ன?
மற்றவர்களின் தவறான செய்கைகளை முனெச்சரிக்கையுடன், எதிர்பார்த்து, அத்தவறுகளால் விளையக்கூடிய மோதல்களை தவிற்கும் வகையில் சாதுர்யமாக வண்டி ஓட்டுதல்.
14. கண்ட்ரோல்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இரண்டு வகைப்படும்.
மேஜர் கண்ட்ரோல்:  ஆக்சிலரேட்டர், ஸ்டியரிங்க், கிளச்பெடல், கியர்லீவர், கைபிரேக், கால்பிரேக்.
மைனர் கண்ட்ரோல்: வைப்பர், மிர்ரர், லைட்சுவிச், பிரேக்லைட், ஹெட்லைட், டிப்பெர்சுவிச், சிக்னல்விளக்கு, டயர்கள்.
15. ஆக்சிலரேடர் பெடலை எவ்வாறு பயன்படுத்தலாம்?
வெடுக்கென்று அழுத்தவும் கூடாது, திடீரென்று விட்டுவிடவும் கூடாது. ஒரே சீராக ஏற்றவும், இறக்கவும். இந்த பெடலை புத்திசாலித்தனமாக உபயோகிக்க பழகிக்கொண்டால் பிரேக்பெடல் உபயொகிப்பதை பெருமளவில் தவிர்க்கலாம்.
16. வண்டியின் எல்லா நிலைகளையும், ஸ்டியரிங்க் ஓட்டுனருக்கு சொல்லிவிடும். சில உதாரணங்கள் கூறமுடியுமா?
நேராக சென்றுகொண்டிருந்த வண்டி இட்துபுறம் இழுக்க ஆரம்பிக்கிறது – இடதுபுற டயர் ஒன்றில் காற்றழுத்தம் குறைந்து வருகிறது.
பிரேக் போடும்போது மட்டும் வலப்புறம் இழுக்கிறது – பிரேக் சரிவர அட்ஜஸ்ட் செய்யப்படவில்லை. இடது சக்கரங்களில் குறைவாகவும், வலது சக்கரங்களில் அதிகமாகவும் பிடித்தம் ஏற்படுகிறது.
17. செத்த ஸ்டியரிங்க் (Dead stearing) என்றால் என்ன?
காஸ்டர் கோணம் மாறிவிட்டால், திருப்பங்களில் ஸ்டியரிங்க் தானாக திரும்பி நேராக வராது. இதனை செத்த ஸ்டியரிங்க் என்பர்.
18. மலைப் பகுதிகளில் ஸ்டியரிங்க் டெக்னிக் யாது?
இரு திருப்பங்களின் நடுவில் முன்சக்கரங்கள் நேராக இருக்கவேண்டும். ஒவ்வொரு திருப்பத்தின் நடுவிலும் ஸ்டியரிங்கை மாற்றி திருப்ப ஆரம்பிக்க வேண்டும். வேகமாக செல்லும்போது ஓட்டுனர் ஸ்டியரிங்கை நேர் எதிர்மாறாக சுற்றுவது போல் தோன்றும். திடீரென்றும், வெடுக்கென்றும் ஸ்டியரிங்க் திருப்பக் கூடாது.
19. ஓவர்ஸ்டியரிங்க், அண்டர்ஸ்டியரிங்க் என்றால் என்ன?
ஸ்டியரிங்க் அதிகம் அல்லது குறைவு. ஓட்டுனர் எண்னுவதைவிட, விரும்புவதைவிட வண்டி அதிகமாக / குறைவாக திரும்புதல்.
20. வண்டியிலுள்ள பலவகை குறைபாடுகளினாலும் ஓவர்ஸ்டியரிங்க் ஏற்படலாம். உதாரணம்?
வண்டி வேகமாகச் சென்று, வலதுபுறம் திரும்ப, ஓட்டுனர் சரியாக கணித்து, முன்சக்கரங்களை 14 டிகிரி திருப்புகிறார். ஆனால் அவர் வண்டியின் நிலையை கருத்தில் கொள்ளவில்லை. வண்டியின் இடதுபுறம் பின்சக்கரத்துக்கு மேல் மட்டும் அதிகமான பார சாமான்கள் தவராக வைக்கப்பட்டுள்ளன. பாரம் தாங்காமல், வில்போல் வளைந்திருக்க வேண்டிய ரோடுஸ்ப்ரிங்குகள் நிமிர்ந்து, ஸ்ப்ரிங்க்சாக்கிளை பின்புறம் தள்ளிவிட்டன. நேராக இருக்கவேண்டிய பின்அச்சு, இதனால் சிறிதே இடதுபுறம் திரும்பி விட்டது. இதன்பலனாக ஓட்டுனர் 14 டிகிரி ஸ்டியரிங்கை திருப்பியபோது, வண்டியானது 17 டிகிரி திரும்ப ஆரம்பித்து, ஓட்டுனரை தள்ளாட வைக்கிறது.

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா

   

No comments:

Post a Comment