சாலை விபத்து – என் பார்வை
70 களில் நான் கேள்விப்பட்ட விபத்து
இது.
பயணிகள் பேருந்து மேல்புறம், சைக்கிள் சுமையுடன்,
ஒரு மழைக்காலத்தில், மாலை நேரத்தில், நகர்புற பேருந்து நிறுத்தத்திலிருந்து, பயணிகளுடன் புறப்பட்டு செல்லும்போது,
எதிர்புறமிருந்து ஓடிவந்த ஒருவர், வாகனத்தில் ஏறுவதற்காக,
வாகனத்தை நிறுத்த சமிக்கை செய்தார். ஓட்டுனர் வாகனத்தடையை
அழுத்த, வாகனம் சிறிது தூரம் சென்று, நின்றது.
வாகனத்தின் டாப்பில் லக்கேஜாக இருந்த சைக்கிள், சாலையின் குறுக்கே, தாழ்வாக சென்று கொண்டிருந்த சக்திவாய்ந்த
மின்கம்பிகளை தொட்டுக்கொண்டிருந்தது. சாலைக்கும் வாகனத்திற்கும்
இடையே ரப்பர் டயர்களால், மின்கடத்தல், அப்போது
தடுக்கப்பட்டிருந்தது.
சிலவினாடிகளில் ஓடிவந்தவர், வாகனத்தில்
ஏறுவதற்கு, கைப்பிடியை தொட்டவுடன், ஈரமான
தரை+வாகனத்தின் கைப்பிடியை தொட்டவரின் கால்+ வாகனம்+ பயணிகள்+ வாகனத்தின் மேலேயுள்ள
சைக்கிள்+ சைக்கிளை தொட்டபடி இருந்த தாழ்வாக சென்று கொண்டிருந்த
அதிக வோல்ட் மின்கம்பிகள் – ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு,,
வாகனத்திற்குள் இருந்தவர்கள் அனைவரும் மரணம். – இந்த விபத்திற்கு யார் காரணம்?
1.
சாலையின் குறுக்கே தாழ்வாக சென்றுகொண்டிருந்த மின்கம்பிகளை
அமைத்த மின்சாரவாரியம்,
2.
அன்று வாகன நிறுவன ஆணைப்படி தடைசெய்யப்பட்ட சுமையான
சைக்கிளை,
வாகனத்தின் மேலே ஏற்ற அனுமதித்த நடத்துனர்,
3.
வாகன நிறுத்தம் அல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்திய
ஓட்டுனர்.
4.
வாகன நிறுத்தம் அல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்த
சமிக்கை செய்த,
அவசரக்காரர்.
5.
சாலையில் மழைநீர் தேங்காமல் செல்ல, வடிகால்
அமைக்காத வடிகால்வாரியம்.
மேலே கண்ட ஐந்து நபர்களில், யாராவது
ஒருவராவது, தன்கடமையை, முழுமையாக செய்திருந்தாலே
போதும். பெரும்விபத்தை தவிர்த்திருத்திருக்கலாம்.
சாலையின் குறுக்கே தாழ்வாக
இருந்த மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்டியிருந்தால், மின்தொடர்பு
சைக்கிளில் தவிர்கபட்டிருக்கும்.
வாகனத்தின்
மேலே,
சுமையான சைக்கிளை, ஏற்ற நடத்துனர் மறுத்திருந்தால்
மின்தொடர்பை தவிர்த்து இருக்கலாம்.
நிறுத்தமில்லாத இடத்தில் ஓட்டுனர் ,வாகனத்தை
நிறுத்தாது இருந்தால், சைக்கிள் + மின்கம்பி
தொடர்பு தவிர்க்கபட்டிருக்கும்.
நிறுத்தமில்லாத இடத்தில்
வாகனத்தை நிறுத்த அந்த அவசரக்காரர் தவிர்த்திருந்தால், அவர்மூலம்
எர்த் தொடர்பு உண்டாவது தவிர்க்கபட்டிருக்கும்.
சாலையோரம் மழைநீர் தேங்காதவாறு- நெடுஞ்சாலைதுறை,
கார்ப்பரேசன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து இவற்றில் எந்த ஒரு அமைப்பாவது, வடிகால் அமைப்பை
செய்திருந்தால் அல்லது மழையே பெய்யாது இருந்திருந்தால்,- மின்
தொடர்பு ஏற்பட்டிருக்காது.
எந்த ஒரு விபத்திற்கும்
தனிநபர் ஒருவர் மட்டுமே காரணம் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது
ஒன்றுக்கு மேற்பட்டவைகள் சேர்ந்து செய்யும் தவறுகளே, விபத்திற்கு
காரணம்.
சமுதாயத்திலுள்ள அனைவருமே
பொறுப்புடன் நடந்துகொண்டால், நிச்சயமாக விபத்துகளை தவிர்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
No comments:
Post a Comment