Friday, August 16, 2013

K7. தனிவாகன விபத்து-Mystery of Single vehicle Crash

தனிவாகன விபத்து

பிற வாகனங்கள் சம்பந்தப்படாத, நமது வாகனம் மட்டுமே சாலையோரம் நிலையாக உள்ள மரம், மின்கம்பம் போன்றவற்றில் மோதுதல் மற்றும் மலைப்பகுதியில் சாலையோரம் சரிந்து கீழே உருளுதல்
இவைகளே தனிவாகன விபத்தாகும்.

தொலைதூர பயணத்திற்கு முன்பாக மாத்திரைகள், மது போன்றவைகளை தவிற்கவும்.

விட்டு விட்டு தொடரும் வெள்ளை கோடுகள் – நம் கண்களை களைப்படைய செய்கின்றன. இமைகள் நம்மை அறியாமல் மூடுவதற்கு முயற்சிக்கின்றன. அப்போது சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, குறைந்தது 30 நிமிடங்களாவது ஓய்வு எடுத்து, அதற்கு பின்பு வாகனம் ஓட்டுவது நல்லது.

சீட்பெல்ட் அணிந்துவாகனம் ஓட்டுவது பாதுகாப்பானது ஆகும்.

திருப்பங்களில் வேகத்தை குறைக்காமல் செல்லும்போது, பக்கவாட்டு சக்தியால் வாகனம் வெளிப்புறமாக தள்ளப்பட்டு விபத்து ஏற்படுகிறது.

மதுஅருந்தி வாகனம் ஓட்டும்போது, நமது மூளை முடிவெடுக்கும் திறன் (Judging Capacity) குறைகிறது.இதனால் விபத்து ஏற்படுகிறது.

நீண்ட பயணத்திற்கு முன்பு இரண்டே விசயங்களை நீங்கள் உறுதி செய்யவேண்டியது அவசியம்:
1.   வாகனம் ஓட்டதகுந்த நிலையில் இருக்கிறதா? (Mechanical Condition)
2.   வாகனம் ஓட்டுவதற்கு தகுந்த மனநிலை, உடல்நிலை நமக்கு இருக்கிறதா? (Mentally and physically fit)

க்ளிக் செய்து வீடியோவைபார்க்கவும்– 

மீண்டும் சந்திப்போம் -சரவணபவா 

No comments:

Post a Comment