Saturday, August 10, 2013

K1. யார் குற்றவாளி?..Who is to Blame?

யார் குற்றவாளி?

http://bhava1948.blogspot.in/ வழியாக
போக்குவரத்துக் கல்வி,
போக்குவரத்துப் பொறியியல்,
சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு
வாகனம் ஓட்டுதல் – சோதனை அறிக்கை
சாலை விபத்து – என் பார்வை’

என்ற தலைப்புக்களில் தங்களை சந்தித்துள்ளேன். அதிலுள்ள கருத்துக்களெல்லம் சிறப்பாக அமைதிருப்பதாக தோன்றினால், அதன் பெருமைகள் அனைத்தும், எனது வழிகாட்டியும்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னால் நிர்வாக இயக்குனருமாகிய திரு ரெங்கனாதன் அவர்களையும், எனது ஆசான் திரு. PJ.மேனுவல் அவர்களையுமே சேரும். ஏதேனும் குறையிருந்தால் அதற்கு எனது கவனக் குறைவே காரணமாகும். அவர்களிடம் நான் கற்றதையும், பெற்றதையும் தங்களுக்கு சமர்ப்பித்தேன். அதை கசடற கற்று, கற்றபின் நிற்க அதற்கு தக என்று கூறி, தொடர்கிறேன் இங்கு…

2012 ஆம் ஆண்டு ஜூலை – டிசம்பர், 6 மாதங்கள் அமெரிக்காவின் சிகாகோ, மற்றும் பாஸ்டன் பகுதிகளில் காரில் சுற்றிகொண்டிருந்தேன். அங்கு முதலில் சாலைகளை திட்டமிட்டு அமைத்துவிட்டு, அதற்கு பின்புதான் குடியிருப்பு பகுதிகளை அமைக்கிறார்கள். நம்மை போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலோ முதலில் குடியிருப்புக்கள் தோன்றி, அதற்குபின்பே சாலைகளை பற்றி கவலைப் படுகிறோம். அங்கு சாலையை கடக்கும் பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை. இங்கோ பாதசாரிகளை பற்றி நாம் அவ்வளவாக கவலைப் படுவதில்லை. முறையான பயிற்ச்சிக்கு பின்பே ஓட்டுனர் உரிமம் அங்கு வழ்கங்கப்படுகிறது. இங்கு பெரும்பாலான கமர்சியல் ஓட்டுனர்கள் லாரியில் கிளீனராக பணியாற்றி, தனது எஜமானராகிய லாரி ஓட்டுனரிடம், அவருக்கு தெரிந்ததை மட்டும் கற்று, எப்படியோ ஓட்டுனர் உரிமமும் பெற்று வாகனம் ஓட்டுகின்றனர். அவர்களுக்காகவே இந்தபகுதியை தொடங்கினேன்.

அமெரிக்காவில் நான் இருந்தபோது ஓட்டுதல் சம்பந்தமான சில குறும்படங்களை எனது மடிக்கணனியில் நான் பதிவு செய்ததையும், இனி தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

முதலில் ஆஸ்த்திரேலிய போக்குவரத்துத் துறை – NFSA வெளியிட்டுள்ள who is to Blame(குற்றவாளி யார்?) -1 இன்று இணைத்துள்ளேன். இதில் சாலைவிதிகளை மீறும் ஒருவர் மறுமுறை விபத்தில் சந்திப்பது, பாதசாரிகளுக்கு முன்னிறிமை, அந்த பெண் நல்லமுறையில் வாகனம் ஓட்டுதல், MSM – Mirror Signal Manover , பின்பார்க்கும் கண்ணாடி பார்த்து, சரியான நேரத்தில், சரியான சமிக்கையை செய்துவிட்டு, வாகன இயக்கத்தை தொடரவேண்டும் போன்றவற்றை அறியலாம்.

பார்த்தபின்பு தங்களின் விமரிசனத்தை அனுப்ப மறக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம் -சரவணபவா  .
யார் குற்றவாளி ?

2 comments:

  1. excellent work uncle. keep going...........

    ReplyDelete
  2. சாலையை பயன்படுத்தும் அனைவரும் படித்து,பின்பற்றி.. பயனடையவும்..

    ReplyDelete