Thursday, August 1, 2013

C6. சாலைவிபத்து – என் பார்வை – 6

சாலைவிபத்து – என் பார்வை – 6

2010 ஜூலை 4 அன்று 12.00 மணிக்கு மதுரையிலிருந்து லக்கேஜ் பெட்டிகளுடன் எங்களது சான்ட்ரோ கார் TN58P 6216 ஓட்டுனர் ராஜாவுடன் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிரிஷ்ணகிரி ஓசூர் வழியாக , அன்றே இரவு 23.20 மணிக்கு பெங்களூரு,ஹூடிசர்கிள், கோல்டென் ஸ்டார் அப்பர்ட்மென்ட் B305 இல்லத்திற்கு வந்து சேர்ந்தது லக்கேஜ்பெட்டிகளை வீட்டில் இறக்கிவைத்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு, மீண்டும் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில்நிலையத்தில்.எங்களுக்காக காத்திருந்தார். ராஜா.

2010 ஏப்ரல் 18 அன்று சென்னை மலர் மருத்துவமணையில் பிறந்த என் பேத்தி ரித்தி, என்மகள் மீனா, மருமகன் சிவா மற்றும் என் மணைவி சியாமளா ஆகியோருடன் நான் ரயில் மூலம் பெங்களூரு கண்டோண்மென்ட்க்கு 2010 ஜூலை 5 அன்று காலை 5.40 மணிக்கு வந்து சேர்ந்தோம். சான்ட்ரோ ஓட்டுனர் ராஜா எங்களை அங்கு வரவேற்றார்.

அன்று காலை 6.00 மணிக்கு கண்டோன்மெண்டிலிருந்து காரில் புறப்பட்ட நாங்கள் 6.30 மணிக்கு Golden star Appartment எங்கள் வீட்டிற்க்கு செல்லவேண்டியது, காலை 8.30 மணிக்குத்தான் சென்றோம். காரணம்:

வீட்டிலிருந்து கண்டோன்மென்ட் சந்திப்புக்கு வந்த ஓட்டுனர் ராஜா, திரும்போது வழிமாறி ( சந்தேகம் இருந்தால் காரை நிறுத்தி அங்குள்ளவர்களிடம் வழி விசாரித்து இருக்கலாம் ) நியூ இன்ட்டெர் நேசனல் ஏர்போர்ட் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது காலை 7.55 மணியளவில் சாலைசந்திப்பு சிக்னலில் நின்று கொண்டிருந்த KA53-9507 இண்டிகா காரின் பின்புறம் இடித்து நின்றது எங்கள் சான்ட்ரோ கார். இடித்தகாரின் பின்சீட்டில் அழகான இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

ஓடும் வாகனம் நிற்கும் தூரத்தை சரியாக கணிக்காமல் ( Error in Judgement )
அதீத தன்னம்பிக்கையுடன் ( Over confident )
அதிமுக்கிய சாலைசந்திப்பில், சிவப்பு சிக்னலில் நின்றுகொண்டிருந்த இண்டிகா காரின் பின்புறம் வந்து மோதியது..

இவைமூன்றும் எங்களது காரோட்டுனர் ராஜா செய்த தவறுகளாக எனக்கு தோன்றியதால், காவல்துறை மற்றும் நீதிதுறை நடவடிக்கையை தவிர்த்து, சமாதானமாகபோவது என்ற முடிவுக்கு வந்தேன்.

நல்ல வேலையாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்ப்படவில்லை. இண்டிகா காரில் வந்த இருகுழந்தைகளும் அந்த காரின் ஓட்டுனர் குழந்தைகளே என்றும், தேவாலைய தந்தையை விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்துவிட்டு, வீடு திரும்புவதாகவும், காரின் முதலாளி வேறுஒருவர் என்றும் பின்னர் விசாரித்து தெரிந்துகொண்டேன். அவரது காரின் பின்புறம் வலதுபுற பம்பர் மட்டும் லேசாக நெளிந்திருந்தது.

அந்த ஓட்டுனர் உடனே காவல்நிலையத்திற்கு இருவண்டிகளையும் எடுத்துசெல்லவேண்டும் என்றார். எனது வண்டியிலோ பிறந்து 77 நாட்களே ஆன எனது பேத்தி ரித்தி நன்கு தூங்கிகொண்டிருந்தாள். அவளை விரைவில் வீட்டிற்கு அழைத்துசெல்ல வேண்டியதுதான் மிக முக்கியம். அதன் பிறகு எங்களது சான்ட்ரோ ஓட்டுனர் ராஜாவும் காலை 10.00 மணிக்கு பெங்களூரு-மதுரை திரும்பவேண்டும்.

பதட்டமான நிலையில் இருந்த இண்டிகா ஓட்டுனர் பாலன் வீட்டிற்க்கு சென்று அவரது குழந்தைகளை அவர் வீட்டில் இறக்கிவிட்டு,பின்பு அவர் வழிகாட்ட நாங்களும் எங்கள் வீட்டிற்கு 2.00 மணிநேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு வந்துசேர்ந்தோம்.. அதன்பிறகு அவர்முதலாளியிடம் தொலைபேசியில் பேசியதில் அவர் வண்டியை வேலை பார்த்து கொடுத்தால் போதும் என்று கூறினார்.

இண்டிகா கார் ஓட்டுனரிடம் கீழ்கண்டவாறு எழுதிவாங்கியது:

அனுப்புனர்: C.Balan, Dr.Licence No. 217/95, Hennur Bundi, Kalyannagar post, Bengalore-43
பெறுனர்:   Thiru S.Sivaraman, B305, Golden star Appartment, Hoodi circle, ITPL Main Road, Bengalore,- 560048,  Karnataka state.
Sir,
5-7-2010 அன்று காலை 7.55 மணியளவில் நியூ இன்டர் நேசனல் ஏர்போர்ட் சாலையில், நான் ஓட்டிவந்த இண்டிகா கார் KA53-9507 மற்றும் தாங்கள் வந்த சான்ட்ரோ கார் TN58P6216 இரண்டும் லேசாக இடித்துகொண்டதில், எனது கார் பின்புறம் வலது புற பம்பர் லேசாக நெளிந்துள்ளது. மற்றபடி எனது காரில் வந்தவர்க்கோ, எனக்கோ எவ்வித ரத்த காயம், உயிர்சேதம் ஏதுமில்லை. எனது கார் பம்பர் சேதத்தினை செப்பனிட்டுத்தர வேண்டுகிறேன். இது சம்பந்தமாக, கோர்ட், போலீஸ் பிந்தொடர்ச்சி எதுவும் தேவை இல்லை. நாம் சமாதானமாக இதனை முடித்துக் கொள்கிறோம்,
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
C.பாலன்

மேலே கண்டபடி எழுதிவாங்கியவுடன், எங்களது ஓட்டுனர் ராஜாவை பெங்களூரு-மதுரைக்கு ரயிலேற்றி அனுப்பிவிட்டு, KHT Motors,Bengalore-560037 ல் இண்டிகா கார் பாடிவேலைக்கு கொட்டேசன் வாங்கியது. அவர்கள் குறிப்பிட்ட ,பாடிவேலைக்கு ஆகும் தொகையான Rs.4886/= (ரூபாய் நான்காயிரத்து எண்னூற்று எண்பத்தியாறு மட்டும்) நன்றியுடன் பெற்றுகொண்டதாக இண்டிகா ஓட்டுனர் பாலனிடம் எழுதி வாங்கி, முழு தொகையையும் அவரிடம் கொடுத்து, அனுப்பினோம்.

அதன்பிறகு எங்களது சான்ட்ரோ காரை பராமரிப்பு வேலைக்காக, பெங்களூரு, ஹூண்டாய் மோட்டார் டீலரிடம் நிறுத்தி, வேலை பார்த்தபின்பு, 1-12-2011 வரை பெங்களூரில் எங்களுடனேயே இருந்தது. அதன்பிறகு எனது பேத்தி ரித்தி, அவளுடைய அம்மா, அப்பாவுடன் அமெரிக்கா சென்றுவிட்டதால், 1-12-2011 அன்று காலை 11.00 மணிக்கு பெங்களூரு வீட்டிலிருந்து புறப்பட்டு, ஓசூர், கிரிஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், தின்டுக்கல் வழியாக மதுரை வீட்டிற்கு இரவு 7.00 மணிக்கு சுகமாக வந்து சேர்ந்தது.

இந்த விபத்தின் போது, ஓட்டுனர் அருகே முன் இடதுபுற சீட்டில் அமர்ந்திருந்த எனது இரு கால்களும் மயிரிழையில் தப்பியதற்காக நன்றி சொன்னேன் ராஜாவிற்கு. நேரடியாக ஒரு விபத்தை சந்திக்கும் போது, முதலில் நாம் பதட்டப்படக்கூடாது ஆகவேண்டிய காரியங்களை நிதானமாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். நம்மீது குற்றமிருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும். விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாமதமின்றி செய்யவேண்டும்


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா.  .

No comments:

Post a Comment