Saturday, March 5, 2016

Overtaking and Being Overtaken. Skills of Defensive Driving 6



முந்திச் செல்லுதல்

சரியான கணித்தல் மற்றும் பொருமையின்மையே, முந்திச்செல்லும்போதும்,முந்தஅனுமதிக்கும்போதும் ஏற்படும் விபத்திற்கு காரணமாகும்
.
முந்திச் செல்லுமுன், பின்பக்க கண்னாடி மூலம் கவனித்து, சரியான சமிக்கையை, சரியான நேரத்தில் செய்து, முன்செல்லும் வாகனத்தை நெருங்கி பின்தொடராமல், மற்ற வாகனங்களின் வேகத்தை சரியாக கணித்து,, முந்திச் சென்றபிறகு உடனே பாதைக்கு குறுக்கிடாமல்,செல்லவேண்டும்.

அபாயகரமான இடத்தில் இடப்புறம் முந்துதல், ஒரே சமயத்தில் பல வாகனங்களை கடக்க முயற்சித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

பார்வை தூரம் மறைக்கும் அளவிற்கு எதிரே பெரிய வாகனம் நிற்கையில், வேகத்தை குறைத்து,அதிலுள்ள எச்சரிக்கையை கவனிக்க வேண்டும்.

பின்தொடரும் வாகனம் முந்திசெல்ல முயலும்போது, வேகத்தை குறைத்து, எதிர்வரும் போக்குவரத்தை கணித்து, உரிய நேரத்தில் முந்திச் செல்ல சமிக்கை செய்யவேண்டும்.

க்ளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
முந்திச் செல்லுதல்

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா

No comments:

Post a Comment