இழப்பீடு அளிக்காததால்
நீதிமன்றத்தில் 200 பேருந்துகள் முடக்கம்
விபத்து இழப்பீடு
வழங்க முடியாததால், நீதிமன்றங்களால்
ஜப்தி செய்யபட்ட 200 அரசு பேருந்துகள், தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களிலேயே முடங்கி
நிற்கின்றன. நிதி தள்ளாட்டத்தில் இருக்கும் அரசு போக்குவரத்து கழகங்கள், பேருந்துகளை
மீட்க முடியாமல் திணறி வருகின்றன. பயணிக்க போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகளும்
தவிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து
கழகங்கள் மூலம் 21,202 அரசு பேருந்துகள் இயக்கபடுகின்றன. இவைகளின் பராமரிப்பு, இயக்கம்
ஆகியவை, 10 கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பேருந்துகளின் இயக்கம்
மூலம் தினசரி சராசரியாக 20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால் வருவாய்க்கு
மேல் செலவின்ங்கள் அதிகரித்து வருவதால், அரசு போக்குவரத்து கழகங்கள், நிதி தட்டுப்பாட்டில்
சிக்கி தவிக்கின்றன.
அரசு போக்குவரத்து கழகங்களின்
செலவினத்தில் கணிசமான பங்கு, சாலை விபத்துக்களின் இழப்பீடு தொகையாக இருப்பது மிகவும்
வருந்ததக்கதாகும். கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் விபத்து இழப்பீடு தொகையை கணிசமாக குறைக்கலாம்:
1.
விபத்து
நடந்தவுடன், விரைவில் சம்பவ இடத்திற்கு, பயிற்சி பெற்ற ஆய்வாளரை அனுப்பி, புகைபடம்,
வரைபடம், காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) ஆகியவற்றை இணைத்து, விரிவான விபத்து
பற்றிய ஆய்வு அறிக்கையை, போக்குவரத்து கழக சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை தேவை.
காவல் துறை FIR ல் விபத்தில் உயிர்சேதம், ரத்தகாயம் அடைந்தவர்க்கு சாதகமாகவே கருணை
அடிப்படையில் அறிக்கை தயாரிக்கின்றனர். அதனை கண்கானித்து உடனுக்குடன் சட்டநடவடிக்கை
எடுப்பதன் மூலம் விபத்திற்கு நமது ஓட்டுனர் பொறுப்பல்ல (DNR) என்று நீதிமன்ற நடவடிக்கையை
துரிதப்படுத்த வேண்டும்.
2.
அரசு போக்குவரத்து
கழகங்களின் ஓட்டுனர் பயிற்சி மையங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் நேர்மையான நடவடிக்கைகளில்,
அரசியல்வாதிகள், வெளிநபர்கள் குறுக்கீடு தவிற்கபடவேண்டும்.
தமிழ்நாடு
அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம், மதுரையின் ஓட்டுனர் பயிற்சி மையத்தின் முதல்வராக
1981 ல் பணியாற்றியபோது, ஓட்டுனர் தேர்வு நடந்தது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஓட்டுனர்
நேர்முக தேர்வுக்கு கம்பம் பகுதியிலிருந்து 7 ஓட்டுனர்கள் பயிற்சி மையத்திற்கு வந்தனர்.
மற்றபகுதிகளிலிருந்தும் பலர் நேர்முக தேர்வுக்கு வந்தனர். அவர்களை சாலையில் பேருந்து
ஓட்டவைத்து, சுக்கான் கட்டுப்பாடு(Steering control), கியர்மாற்றம்(Gear
shifting), பழக்கம்(Driving Habits), தீர்மானிக்கும் திறன்(Judging Capacity) ஆகியவைகளை
கணித்து, ஓட்டுனர் தெரிவு செய்யப்பட்டனர். கம்பத்திலிருந்து வந்த 7 நபர்களில் 6 நபர்கள்
தகுதியற்றவர்களாகவும், 1 நபர்மட்டுமே தகுதியுள்ளவராகவும் அறிக்கை அனுப்பியது.
அந்த
கம்பம் 7 நபர்களின் பின்பலம் பற்றி எனக்கு தெரியாது. “ அண்ணே, அந்த அதிகாரி பேர் சரவணபவா,அவர் ஒரு கம்யுனிஸ்ட், நம்ம ஆழும்கட்சியினர் 6 நபர்களையும்தேர்வு செய்யாமல்,
எதிர்கட்சி 1 நபரை மட்டும் தேர்வு செய்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்று அப்போதய போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்களிடம் என்மீது புகார்
கூறப்பட்டது.
He is a man of Principle. Take keen interest & Quick in his
Work என்று எனது உயர் அதிகாரிமூலம் அமைச்சருக்கு தெரிவித்து, அதன்பின் அவரது ஆலோசனைப்படி
கம்பம் 7 நபர்களை மறு சோதனைக்காக, கும்பகோணம் போக்குவரத்து கழக பயிற்சிமையத்திற்கு
ரகசியமாக அனுப்பிவைக்கபட்டனர். நான் தேர்வு செய்த 1 நபரை தவிர மற்ற 6 நபர்களும் அங்கும்
ஓட்டுதலில் தெரிவுசெய்யபடவில்லை. அமைச்சருக்கு தகவல் தெரிந்ததும் அவர் கூறியது எனை
பின்னர் வியப்புக்குள்ளாக்கியது!
அந்த அதிகாரி கம்யுனிஸ்டாயிருந்தாலென்ன..நேர்மையான
அதிகாரி.. அவரை அங்கிருந்து மாற்றம் செய்யகூடாது.. என்று என்னை பற்றி விமர்சனம் செய்ததாக
பின்னர் எனது உயர் அதிகாரி என்னிடம் நேரில் கூறியதை இன்றும் மறக்க முடியவில்லை. இதுபொன்ற
சூழல் தற்போது குறைவதும், விபத்துக்கள் அதிகமாகி,, விபத்து இழப்பீடும் அதிகமாகி, 200
பேருந்துகள், தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் முடங்கியதற்கு காரணமாகும்
ஓட்டுனர்
பயிற்சிமையங்களை பலப்படுத்துங்கள். நேர்மையான அதன் நடவடிக்கையில், வெளிநபர் குறுக்கீட்டை
தடைசெய்ய நடவடிக்கை தேவை இது நடக்குமா?
மீண்டும்
சந்திப்போம் -சரவணபவா
No comments:
Post a Comment