Friday, October 25, 2024

L1. நெடுஞ்சாலையில் ஓட்டுதல்-Freeway Driving


க்ளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.

.நெடுஞ்சாலையில் ஓட்டுதல்

நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுதல் (Freeway Driving) வேகமாக செல்லும் வாகனங்களுக்காக திட்டமிட்டு

அமைக்கப்பட்டதாகும்.

அவசர காலங்களை தவிர மற்ற நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது.

ஓடும் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்குமுன் வேகத்தளர்ச்சி தடம் (Decelerated Lane) சென்று, வேகத்தை 

குறைக்க வேண்டும்.

தடம் மாற தயக்கம் காட்டாமல், பின்பார்க்கும் கண்னாடி பார்த்து, சமிக்கை செய்து, விறைவில் தடம்

மாறவும்.

முந்திசெல்லும்போது விளக்கு சமிக்கை செய்து, வேகமாக தடம்மாறி, சென்று, பின்வரும் வாகனத்திற்கு 

போதிய இடைவெளி விட்டு மீண்டும், தனது முந்தய பாதைக்கு சென்று, விளக்கு சமிக்கையை 

அணைக்கவேண்டும்

பின்தொடரும்போது இரண்டுவினாடி தூரம் இடைவெளி விட்டு தொடரவேண்டும்.

மழைக்காலத்தில் அதிக எச்சரிக்கை தேவை. அப்போது இரண்டு மடங்கு அதிகமாக இடைவெளிவிட்டு

தொடரவும்.

நெடுஞ்சாலை குடும்ப சண்டைக்கான இடமில்லை என்பதை அறியவும். கவனம் சிதறினால் விபத்தை

சந்திக்க நேரிடும்
.

மீண்டும் சந்திபோம் -சரவணபவா .

No comments:

Post a Comment